
பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகமது அக்பர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இன்று துல்ஹஜ் மாதத்தின் பிறை நிலவு தென்பட்டதை எடுத்து பக்ரீத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது இந்த பக்ரீத் பண்டிகை. பொதுவாக துல்ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.