தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் காலிப் பணியிடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று அரசு உறுதி கொடுத்திருந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகளில் கூடுதலாக 213 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை 2540 ஆக உயர்ந்துள்ளது.