திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ல் அப்போதைய முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 3300 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு,  தனியார் நிறுவனத்திற்கு 10% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக அப்போது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

371 கோடி மோசடி நடந்ததாக அந்த புகார் சொல்லப்பட்டது. இந்த புகாரை  மாநில CID காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தான் அந்த விசாரணையில் நேற்று சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவரிடம் விசாரம் நடத்தப்பட்டு,  இன்று அதிகாலை 6 மணியளவில் அவர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு அங்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். முதலாக சந்திரபாபு நாயுடுவிடம் தனிப்பட்ட முறையில் வாதத்தை கேட்டிருந்தார். அப்போது தன் மீது குற்றமில்லை என்று அவர் வாதிட்டார். இது மட்டுமின்றி 24 மணி நேரம் கழித்து தான் இங்கு  கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் வாதம் முன்வைத்தார். அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி    14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.