
ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்கவைத்து, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார். தனக்கு ஆதரவு அளித்தது போல சகோதரிக்கும் ஆதரவு அளிக்க வேண்டுமென வயநாடு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.