வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அவர் தற்போது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகின்றார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.