ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜேடிஎஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ராகுல் காந்தி எம்பியாக இருந்த வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. முன்னதாக வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியானது.