
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. இதில் மத்திய சென்னையில் திமுக சார்பில் தயாநிதிமாறன் வேட்பாளராக போட்டியிட்ட நிலையில் அவர் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி அதே தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ரவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்றும் அதிரடியாக அறிவித்தது.