
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் 1.16 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு வருடம் நிறைவடைந்ததால் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் மற்றும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆகியோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தற்போது சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று சட்டசபையில் மூன்றாம் நாள் கூட்டம் நடைபெற்று வரும் இடையில் தற்போது உதயநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.