பிரபல பாலிவுட் நடிகை நூர் மாலாபிகா (31)  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டிலிருந்தே துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டனர்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர் பிரபல நடிகை கஜோலுடன் ‘தி ட்ரையல்’ என்ற வெப் தொடரில் நடித்தார். சிஸ்கியான், வாக்மேன், திக்கி சட்னி மற்றும் ஜகன்யா உபயா போன்ற வெப் சீரிஸ்கள் இவருக்குப் புகழைக் கொடுத்தன.