பிரபல மிமிக்ரி கலைஞர் மற்றும் நடிகர் அவ்வை சந்தோஷ். இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தன்னுடைய பைக்கில் கொச்சி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி அவருடைய பைக் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இவர் தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன், மைடியர் குட்டிச்சாத்தான், சத்தியம் சிவம் சுந்தரம் உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி படவேடத்தில் நாடகத்தில் நடித்ததால் அவ்வை சந்தோஷ என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.