தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது.‌ இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் கல்காஜியில் போட்டியிட்ட முதலமைச்சர் அதிஷி வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தினார். புதுடெல்லியில் கெஜ்ரிவால், ஜங்புராவில் மணீஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.