நியூசிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது..

ரோகித் சர்மா தலைமையிலான ஒரு நாள் அணியில் சுப்மன் கில், இஷான் கிசான், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் சேர்க்கப்படவில்லை. KL ராகுல் & அக்சர் படேல் ஆகியோர் குடும்ப கடமைகள் காரணமாக நியூசிலாந்து ஹோம் தொடருக்கு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை. அதே சமயம் பிருத்வி ஷாவுக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), கே.எல் ராகுல் (து.கே ), ஷுப்மான் கில், சி புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எஸ் பாரத் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ), ஆர் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்

நியூசிலாந்து டி20 போட்டிக்கான இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கே), சூர்யகுமார் யாதவ் (து.கே), இஷான் கிஷன் (வி.கீ.),ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (வி.கே.), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யூசுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக். , சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (வி.கீ.), ஹர்திக் பாண்டியா (து.கே), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி ஹைதராபாத் (ஜனவரி 18), ராய்ப்பூர் (ஜனவரி 21) மற்றும் இந்தூரில் (ஜனவரி 24) 3 ஒருநாள் போட்டிகளும், ராஞ்சி (ஜனவரி 27), லக்னோ (ஜனவரி 29) மற்றும் அகமதாபாத்தில் (பிப்ரவரி 1) 3 டி20 போட்டிகளும்  நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 2 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நாக்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 முதல் 21 ஆம் தேதி வரை டெல்லியிலும் நடைபெறுகிறது..