தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. அரபிக் கடலில் வரும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் இப்போது மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக ஒரு புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி, அதே பகுதியில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது. இது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் உடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா? மண்டலமாக வலுப்பெறுமா?  அல்லது புயலாக வலுப்பெறுமா என இப்போது வரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கப்போகிறது என்றால் உருவாகும் சூழல், மிக நெருக்கமாக வந்த பிறகுதான் அதனுடைய பாதையை கணிக்க முடியும். எந்த திசையில் போகும், எதை நோக்கிப் போகும் என்று கடல் சார்ந்த சூழல் எப்படி இருக்கிறது? எந்த அளவுக்கு வலுப்பெறும் என்ற தகவல்கள் எல்லாம் அடுத்தடுத்து தான் தெரிய வரும். இப்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கனமழையாக பொழிந்து இருந்தாலும் கூட இயல்பை விட 3 சதவீதம் மழைப்பொழிவு தமிழகத்தில் மழை பற்றாக்குறை இருக்கிறது. எனவே அடுத்தடுத்த நாட்களில் அது ஈடுகட்டக்கூடிய சூழல் இருக்கும். ஆனால் சென்னையை பொறுத்தவரை இந்த வாரத்தின் தொடக்கத்தில் திங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிழமைகளில் மழை  108 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்தது. இது இயல்பை விட 50 சதவீதம் அதிகம்..

டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிறைவடையாது. அதுவரை ஏதாவது புதிதாக  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே மிக்ஜாம் புயல் உருவாகி சென்ற நிலையில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீண்டும் சென்னை பாதிக்கப்படுமா என அச்சப்பட தேவையில்லை. இது அரபிக் கடலில் உருவாகிறது, வங்க கடல் கிடையாது..

தென்கிழக்கு வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவானது. அது மத்திய வங்க கடல் பகுதிக்கு வந்து, சென்னையை கடந்து சென்றது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக் கடலில் உருவாகிறது. அதாவது கேரளாவுக்கு, மாலத்தீவு பக்கத்தில் இந்த புதிய  காற்றழுத்த தாழ்வு உருவாக போகிறது. அப்படி உருவாகி நகரும் பட்சத்தில் இந்தியாவை நோக்கி நகர்ந்து வந்தாலும், அது சென்னை உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. எனவே அந்த அளவுக்கு அச்சம் தேவையில்லை..