
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என கூறி கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை ஐஐடி குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில் நீதிபதிகளிடம் முறையீடு செய்யப்பட்டது.