துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4,300 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று இரண்டாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதால் நிலநடுக்கத்தினால் பெருமளவு சேதங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.