
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று சட்டசபையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கண்டனம் தெரிவித்தார். அதாவது புஷ்பா 2 படக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் தற்போது மருத்துவமனையில் கோமாவில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் போலீசாரின் அனுமதியை மீறி படம் பார்க்க சென்றதாகவும் ரோடு ஷோ நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதன் பிறகு தாயை இழந்து மருத்துவமனையில் இருக்கும் 8 வயது குழந்தைக்கு யாருமே ஆறுதல் கூறாமல் சிறைக்கு சென்று வந்த அல்லு அர்ஜுனை சந்திக்க பிரபலங்கள் அனைவரும் செல்கிறார்கள்.
இப்படி தெலுங்கு திரை உலக பிரபலங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இனி நான் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக இருக்கும் வரையில் திரையுலகினருக்கு எந்தவித சிறப்பு சலுகைகளும் கிடைக்காது என்று அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா மாநிலத்தின் இனி நான் முதல்வராக இருக்கும் வரைபடத்தின் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி என்பது வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.