நடிகர் விஜயின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ட்விட்டரில் அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் அதில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் பெயரை பதிவு செய்ய அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றுள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரசிகர் மன்றமும், அனைத்து மாவட்ட ரசிகர் மன்றமும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர். தற்போது இந்த பெயரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.