டெல்லி மதராசி கேம்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக தலா 8000 ரூபாய் வழங்கவும்,  4000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.