நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடும் எதிர்ப்பு நிலவுவதால் மக்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.  அமித்ஷா விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.