தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா 2, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் படங்களில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹாவிடம் புஷ்பராஜ் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் இன்று பாபி சிம்ஹாவின் தந்தையை காரில் ஏற்றிக்கொண்டு அவருடைய வீட்டில் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அந்த கார் விபத்தில் சிக்கிய நிலையில் 3 பேர் பலத்த காயம் அடைந்ததோடு 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் புஷ்பராஜ் மதுபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. மேலும் இதனால் வரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.