ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டரின் விலை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி இன்று நவம்பர் 1 சிலிண்டரின் விலை என்னவென்று வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 61.50 ரூபாய் அதிகரித்து 1964.50 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 48.50 உயர்ந்த நிலையில் இந்த மாதம் 61.50 அதிகரித்துள்ளது.

மேலும் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் 818.50 இருந்த நிலையில் இந்த மாதமும் அதே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை நிம்மதி அடையச் செய்துள்ளது.