இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிமங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலோகமான லித்தியம்,செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி தயாரிப்புகளில் லித்தியம் முக்கிய பங்காற்றுகிறது. லித்தியம் கிடைத்திருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த அறிவிப்பை சற்று முன் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.