இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் என்று கொடுத்தவர். கடந்த வருடம் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார்.

இந்நிலையில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களை மத்திய அரசாங்கம் கௌரவப்படுத்துவது வழக்கம். அதாவது அவர்களுக்கு ராணுவம் அல்லது போலீசில் உயர் அதிகாரிகள் பொறுப்பு வழங்கப்படும்.

அதாவது தோனி, சச்சின் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கும் மத்திய அரசாங்கம் துணை ராணுவத்தில் (பிராந்தியம்) கர்னல் லெப்டினன்ட் பதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் கர்னல் பதவி வழங்கி நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கௌரவித்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.