தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஜப்பான், சீனா, வியட்னாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாக கண்டுனர்ந்து அதனை தங்கள் வயல்களில் செயல்படுத்தும் விதமாக 100 முன்னோடி உள்ளவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் இதற்காக 2 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.