
சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தன்னுடைய 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமையின் தந்தை புகார் கொடுத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பின்னர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு அமைப்பு அமைத்து விசாரணை மேற்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் மற்றும் சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கருதி அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணையை சரியாக மேற்கொள்ளாத கருதி பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதாகரை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய உதவியதாக கைது செய்யப்பட்ட சுதாகருக்கு தற்போது சென்னை போக்சோ நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. மேலும் இதே போன்று பெண் காவல் ஆய்வாளர் ராஜிக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.