இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடமாற்றம் ஆகியவை குறித்து சபாநாயகர் முடிவெடுக்காததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.