கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டையில் குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு மினி சரக்கு வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.