தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு மற்றும் அவருடைய உறவினர்கள் என 8-க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகங்கள் என அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீடுகளிலும் தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இருக்கும் நிலையில் புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள குட் பேட் அக்லி ஆகிய திரைப்படத்தை தயாரித்துள்ளது. இன்று காலை முதல் தயாரிப்பாளர் மைத்திரி நவீன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செர்ரி‌ ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும் இவர்களுடைய உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.