சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது வெள்ளித்திரையில் மக்களிடையே பிரபலமானவர் கவின் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. சமீபத்தில் நெல்சன் பிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் கவினை வைத்து ஒரு படத்தை தயாரித்தார்.

அந்த படத்திற்கு ப்ளடி பெக்கர் என டைட்டில் வைக்கப்பட்டது. நெல்சன் திலிப் குமாரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த சிவபாலன் தான் அந்த படத்தை இயக்குகிறார். பிளடி பெக்கர் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற 31-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.