
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 7 சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக திகழ்ந்து வந்தது. 7 சீசனை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் சமீபத்தில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினாலும் அடுத்து யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கப் போவது என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று விஜய் தொலைக்காட்சியிடமிருந்து பிக் பாஸ் சீசன் 8-ல் நடிகர் விஜய் சேதுபதி தான் அடுத்த தொகுப்பாளராக களம் இறங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இணையத்தில் வலம் வரும் தகவலின் படி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூபாய். 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.120 கோடி வரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.