இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 11-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் அதற்கு மோக்கா என பெயரிட்டு இருப்பதாகவும் கூறியது. இந்நிலையில் மோக்கா புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுபெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவியது.

அது இன்று காலை மேலும் வலுபெற்று மிகத்தீவிர புயலாக வடக்கு நோக்கி நகர்கிறது. இது படிப்படியாக வலுபெற்று வடக்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் அருகே மோக்கா கரையை கடக்கவுள்ளது. அந்நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 175 கிமீ இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.