வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் சான்டோ, அணியின் அண்மைய தோல்வியை அணியின் பேட்டிங் நடைமுறையுடன் தொடர்புபடுத்தியுள்ளார். இந்தியாவை வீழ்த்த முடியாததற்கு சான்டோ அளித்த விளக்கத்தில், தனது அணி பெரும்பாலும் சுழலுக்கு உகந்த மைதானங்களில் 140-150 ரன்கள் மட்டுமே அடிக்க பழகியதால்தான் 180 ரன்கள் போன்ற பெரிய இலக்குகளை அடிப்பதில் சிரமம் இருப்பதாக குறிப்பிட்டார்.

இதே பிரச்சினையை சமீபத்திய T20 போட்டியில் இந்தியாவுக்கு எதிரான தோல்வியிலும் அவர் உணர்ந்துள்ளார். குவாலியரில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில், வங்கதேசம் 127 ரன்களுக்கு சுருண்டது. அதன்பின் இந்தியா 11.5 ஓவரில் இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெற்றது. 180 ரன்கள் போன்ற இலக்குகளை அடிக்க தேவையான பயிற்சி மற்றும் மனநிலையை தங்கள் அணியில் மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

சுழல் மைதானங்களில் அதிகமாக விளையாடுவதால், வங்கதேசம் வேகப்பந்துவீச்சு ஆதரிக்கும் மைதானங்களில் பெரிய இலக்குகளை சாதிக்கத் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1௦ வருடமாக இப்படிதான் விளையாடுகிறோம். அணியின் திறமைகள் இருந்தாலும், அவர்களது அணுகுமுறையில் இன்னும் மேம்பாடு தேவை. சிறந்த மைதானங்களில் தொடர்ந்து ஆடுவதற்கு வங்கதேசம் தன்னை சரியாக அமைத்துக்கொள்ளவில்லை. குறிப்பாக, T20 போட்டியில் அதிக ரன்கள் எடுப்பதற்கு வீரர்களின் தேர்வும், மனோபாவமும் முக்கியம் என்றார்.