இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு அதோடு வசதிகளும் அதிகம். அதன் பிறகு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வகையில் நீங்கள் செல்ல வேண்டிய ரயில் தாமதமாக வந்தால் உங்களுக்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இலவச உணவு வழங்கப்படும். இந்த விவரம் பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். அதாவது ரயில் தாமதமாக வரும்போது பயணிகளுக்கு தண்ணீர், சிற்றுண்டி மற்றும் உணவு போன்றவைகள் ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு வசதிகள் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற ஒரு சில எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. பல நேரங்களில் ரயில்கள் தாமதமாக வரும் போது பயணிகளுக்கு இதுபோன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. ஒருவேளை இந்த வசதிகள் உங்களுக்கு கிடைக்காவிடில் நீங்கள் IRCTC-ஐ தொடர்பு கொண்டு கூறலாம். மேலும் காலை உணவாக தேநீர், காபி மற்றும் பிஸ்கட் போன்றவைகளும், மாலை நேரத்தில் டீ, காபி, ஒரு பட்டர் சிப்லெட் மற்றும் நான்கு ரொட்டிகள் போன்றவைகள் கொடுக்கப்படுகிறது. மதிய நேரத்தில் பருப்பு, ரொட்டி காய்கறிகள் போன்றவைகளும், சில சமயங்களில் பூரி போன்றவைகளும் வழங்கப்படும்.