இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதனிடையே 10 வருடங்களுக்கும் மேல் ஆதார் தகவலை அப்டேட் செய்யாதவர்கள் மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை https://myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதளப்பக்கத்தில் தங்களது குடிமக்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளை சமர்ப்பித்து அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்ட பயனரின் விபரங்களில் மாற்றங்களைச் செய்ய பயனர்களிடம் இருந்து யுஐடிஏஐ வழக்கமாக ரூபாய்.50 கட்டணமாக வசூலிக்கிறது. ஆதார் மையங்களில் ஆவணங்களை அப்டேட் செய்வதற்கு ரூ.50 கட்டணத்தை செலுத்தவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.