இந்திய திரைப்பட நடிகையான அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் தமிழில் மாதவனுடன் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அருந்ததி படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் அடைந்தார்.

அந்தப் படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள் கதை அம்சங்கள் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து உன்னை காதலிக்கிறேன் என கூறினான்.

எனக்கு அப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. உயிருக்கு உயிராக நேசிப்பதாக கூறினான். அப்போது அந்த வயதில் எனக்கு அது சரியா? தவறா? என்பது கூட தெரியாது. நானும் சரி என்று அந்த காதலை ஏற்றுக்கொண்டேன்.

இருப்பினும் அந்த நினைவுகள் எப்போதுமே இனிமையாகத்தான் இருக்கும் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அது இருக்கும்”என தெரிவித்துள்ளார்.