கடகம் ராசி அன்பர்களே..!
இன்று சில நிகழ்வு மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணிகள் சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். எதிலும் முன்னேற்றமடைய இறைவழிபாடு வேண்டும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். யாரைப்பற்றியும் குறைக்கூற வேண்டாம்.

காதலில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. பேச்சில் கவனம் வேண்டும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனையின்றி சுமுகமாக இருக்கும். பண விஷயத்தில் கவனம் கொண்டால் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைகயே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.