2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்..

2023 ஆசிய கோப்பை தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் இடையிலான போட்டியுடன் போட்டி தொடங்கும்.  ஆசியக் கோப்பையில், 6 அணிகள் தலா 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குரூப்-ஏவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளமும், குரூப்-பியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன.

இதற்கிடையே 2023 ஆசிய கோப்பை தொடங்கும் முன், நேற்று பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் தனது ஆசிய கோப்பைக்கான அணியில் இடது கை பேட்டர் சவுத் ஷகீலை இணைத்துள்ளது. அதே சமயம், முன்பு அணியில் இருந்த தயப் தாஹிர், தற்போது டிராவல் ரிசர்வ் வீரராக மாற்றப்பட்டுள்ளார்.

2023 ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கே), ஷதாப் கான் (து.கே), அப்துல்லா ஷபிக், ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, இமாம்-உல்-ஹக், முகமது ஹாரிஸ் (WK), முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (WK), முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல், ஷஹீன் அப்ரிடி மற்றும் உசாமா மிர். டிராவல் ரிசர்வ் வீரர் : தயப் தாஹிர்.

ஆசிய கோப்பை 2023 அட்டவணை

ஆகஸ்ட் 30: பாகிஸ்தான் Vs நேபாளம், முல்தான்

ஆகஸ்ட் 31: பங்களாதேஷ் Vs இலங்கை, கண்டி

செப்டம்பர் 2: பாகிஸ்தான் Vs இந்தியா, கண்டி

செப்டம்பர் 3 : பங்களாதேஷ் Vs ஆப்கானிஸ்தான் , லாகூர்

செப்டம்பர் 4: இந்தியா Vs நேபாளம், கண்டி

செப்டம்பர் 5: ஆப்கானிஸ்தான் Vs இலங்கை, லாகூர்

சூப்பர்-4

6 செப்டம்பர் : A1 Vs B2, லாகூர்

9 செப்டம்பர் : B1 Vs B2, கொழும்பு

10 செப்டம்பர் : A1 Vs A2, கொழும்பு

12 செப்டம்பர் : A2 Vs B1, கொழும்பு

14 செப்டம்பர் : A1 Vs B1, கொழும்பு

15 செப்டம்பர் : A2 Vs B2, கொழும்பு