அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளியன்று பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் சூப்பர் ஃபோர் போட்டியின் போது ஏற்பட்ட இடது குவாட்ரைசெப்ஸ் ஸ்ட்ரெய்ன் காரணமாக  அக்சர் படேல் இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆடவர் தேர்வுக் குழு திரு வாஷிங்டன் சுந்தரை மாற்று வீரராக நியமித்துள்ளது.  ஆல்ரவுண்டர் இன்று மாலை கொழும்பு வந்து அணியில் இணைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் கொழுப்பில் மோதுகிறது. இந்த போட்டியில் ஆடும் லெவனில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. அணியில் ஆடுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என தெரிகிறது.

இருப்பினும் அக்சர் படேலுக்கு காயம் விரைவில் குணமடையாத பட்சத்தில் ஆசியக்கோப்பைக்கு பின் 2023 உலக கோப்பைக்கான அணியிலும் வாஷிங்டன்  சுந்தர் இடம்பெற வாய்ப்புள்ளது. இதற்கிடையே ஆசிய கோப்பைக்கு பின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (து.கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்.