
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியின் நட்சத்திர விளையாட்டு வீரரருமான விராட் கோலி, இவர் சமீபத்தில் தனது இணையதள பக்கத்தில் தனக்க மிகவும் பிடித்த பாடல் என “பத்து தல” படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம்தான்.. “என்ற சிம்பு பாடலை தெரிவித்து இருந்தார்.
அந்தப் பதிவை நடிகர் சிம்பு தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு விராட் கோலியை டேக் செய்து “நீ சிங்கம் தான்..”என நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி இருவரின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் ரசிகர்களிடையே வரும் வரவேற்பை உருவாக்கியுள்ளது.