அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் அந்த நாட்டின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 1% அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 5.17 லட்சம் கோடி ரூபாய் நிதியை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி உதவி செய்து வருகிறது. இதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 60 பில்லியன் டாலர்கள் நிதி உதவியை பின்தங்கிய நாடுகளுக்கு கொடுத்துள்ளது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இரண்டாவதாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்கு அமெரிக்கா பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி வந்துள்ளது. இதனை இனிவரும் காலங்களில் நிறுத்துவதாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்புக்கு விதிவிலக்காக இஸ்ரேல், சூடான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு அளிக்கப்பட்ட வந்த அவசர உணவு திட்டம் மற்றும் ராணுவ திட்டங்களுக்கு அமெரிக்கா நிதி அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.