74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்து நடைபெறுகிறது.

ஆளுநர் ஆர்.என் ரவி வழங்கும் இந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். அமைச்சர்கள் உதயநிதி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு மற்றும் பாஜக அண்ணாமலை, தாமக தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். காங்கிரஸ். விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.