தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் 2 நாட்களில் 621 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் வெளியிட்டு 621 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புயல் வேகத்தில் கலெக்சன் அதிகரித்து வருவதால் புஷ்பா 2 திரைப்படம் அத்தனை சாதனைகளையும் முறியடித்து புதிய சரித்திர சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.