சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், உலக அழகி மற்றும் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டார். நடிகர் விக்ரம் உடன் மேடையில் விருதைப் பெற்ற ஐஸ்வர்யா, மகளுடன் விழாவில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த முக்கிய பிரபலங்களின் இடத்தில், ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவிற்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவராஜ்குமாரை சந்திக்கும் போது, ஆராத்யா அவரின் காலில் விழுந்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆராத்யாவின் பண்பாடுகளை பற்றி அதிக பாராட்டுகளை பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ராய் தனது மகளை எப்படி அருமையாக வளர்த்துருக்காங்க என அனைவரும் ஆச்சரியத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.