ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அம்மா வாழ்ந்த  இல்லத்தில் கொலை, கொள்ளை செய்த அந்த துரோகிகளை… துரோகி  கூட்டத்தை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். அந்த கூட்டம் யாருடைய துணையோடு நடைபெற்றது. அங்கே நடந்த சம்பவத்தை எல்லாம் நாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு, தொண்டர்களுக்கு, பொதுமக்களுக்கு விரிவான முறையிலே  எடுத்து வைத்தோம்.

அதை  கேட்டு… அங்கே இருக்கின்ற பொதுமக்களும்,  தாய்மார்களும் அம்மா வீட்டிலேயே கொள்ளை அடித்தானா ? எடப்பாடி…  கொலை செய்தானா ? எடப்பாடி…  துரோகி அந்த அம்மா காலில் விழுந்து முதல்வர் பதவியை பெற்ற அந்த எடப்பாடி செய்திருப்பான் என்று மக்கள் சொல்லுகின்ற ஒரு நிலையை ஆர்ப்பாட்டத்தில் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறோம்.

அப்படிப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய கழக நிர்வாகிகளுக்கு நான் மீண்டும் என்னுடைய மாவட்ட கழகத்தின் சார்பாக உங்களுக்கு நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் தொண்டர்கள் நிறைந்த  மாவட்டம்… தொண்டர்களால் செய்த ஆர்ப்பாட்டம்…  ஒருபுறம் தலைவர்கள் பதவி அனுபவித்தவர்கள்…. அங்கே இருப்பவர்கள் முழுவதும்  முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து, மதுரையிலே மாநாடு நடத்திருக்கிறார். அந்த மாநாட்டிற்கு ஒரு மாவட்டத்திலிருந்து எத்தனை பேர் சென்றார்கள் சொல்ல முடியுமா ? 

எங்களுடைய கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து ஒரே ஒரு பேருந்து…. ஒரே ஒரு பேருந்து தான். கிருஷ்ணகிரியிலே 33 வார்டுகள் இருக்கிறது. ஒரு வார்டுக்கு ரெண்டு பேர் என்று சொன்னாலும் கூட 66 பேர் ஆகுது. ஆனால் சென்ற வாகனம் ஒரு பேருந்து. அப்படி என்றால் ? அங்கு சேர்ந்த கூட்டம் எனக்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள்…  வடமாநில தொழிலாளர்களை அனுப்பி வைத்து…  அங்கே நாற்காலியிலே அமர வைத்து நடத்திய கூட்டம் தான் எடப்பாடி கூட்டம் என விமர்சனம் செய்தார்.