விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சி 8வது சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏஞ்சல்கள், டெவில்கள் சுற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற “அமரன்” திரைப்படம் பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பாகியது.
இதனை இரவு நேர காட்சிகளாக தின்பண்டங்கள் கொடுத்து திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அமைப்பை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. இந்தத் திரைப்படத்தின் பிரமோஷன்க்காக ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தார். நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாவதாக அமரன் திரைப்படம் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது குறிப்பிட்ட தக்கதாகும்.