விஜய்யின் GOAT திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருந்தாலும், சில இடங்களில் வேலை நாட்களில் ரசிகர்கள் கூட்டம் குறைந்ததால், சில பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வார இறுதியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், வேலை நாட்களில் காட்சிகள் ரத்து செய்வதை எதிர்பார்க்கவில்லை.

GOAT திரைப்படம் விமர்சகர்களிடையிலும், ரசிகர்களிடையிலும் நல்ல வரவேற்பை பெற்றது. விஜயின் நடிப்பின் பல்வேறு அம்சங்கள் பாராட்டைப் பெற்றுள்ளன. குறிப்பாக, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விஜய் நடித்தது, கேமியோ காட்சிகள், மற்றும் படத்தின் ரெபரென்ஸ்கள் போன்றவை படம் பெற்ற வெற்றிக்கு காரணமாகியுள்ளன.

இந்நிலையில், விஜயின் அடுத்த படமான தளபதி 69 குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.