
ஜப்பான் நாட்டில் வயதானவர் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தனித்து வாழ்ந்து வருகின்றார்கள். அந்நாட்டில் வயதானவர் தனித்து வாழும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் பாதி வரை 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு தேசிய காவல்துறை ஏஜென்சி அறிவித்துள்ளது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் வீட்டில் தனித்து வாழ்ந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களில் 4000 பேர் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்நாட்டு காவல்துறை ஏஜென்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை எடுக்கப்பட்டதாகும்.
இவர்களின் வயது 65 முதல் 70 வயதை தாண்டியவர்கள், வீட்டில் இறந்து கடந்தவர்களில் 40% வரை ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதோடு 130 பேர் இறப்பதற்கு முன் ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்தவர்கள் ஆவார் என்று கூறப்படுகிறது.