ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் ISIS அமைப்பு தொடர்பு இருக்கின்றது என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மீதான தாக்குதலை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்தியாவும் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக  வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் இஸ்ரேல் நாட்டுக்கு தங்களுடைய முழு ஆதரவை அளித்திருக்கின்றன.

மேலும் பல அமெரிக்க ஆதரவு நாடுகள் இதே போன்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பின் தொடர்பு இந்த தாக்குதலிலே இருக்கிறது என்று ஆதாரம் தெரிவிக்கப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டால் மேலும் பல நாடுகள் தீவிரவாத தாக்குதல் என்று இதை வலியுறுத்தி, கண்டனம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் வெஸ்ட் ஏசியா என்று சொல்லக்கூடிய வளைகுடா பகுதிகளிலே பல்வேறு நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலே பல்லாயிரக்கணக்கானோர் இதன் காரணமாக உயிரிழந்தனர்.  அப்படிப்பட்ட சூழ்நிலையிலே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர்பு இந்த தாக்குதலில் இருக்குமானால் பல்வேறு நாடுகள் கூடுதலாக இந்த தாக்குதலை கண்டிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருக்கின்றது என இந்திய நாட்டில் உள்ள இஸ்ரேல் தூதர், மேற்கோள் காட்டி இருப்பது கொடூரமான செய்கை. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புதான் இது போன்று பெண்களை படுகொலை செய்வது, குழந்தைகளை படுகொலை செய்வது, கைதிகளை தலையை வெட்டி கொல்வது போன்ற பல கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருந்தது என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு,  ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலேயே ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில் பார்க்கப்பட்டது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து பிற குழுக்கள்,  பல்வேறு அரசுகளும்  ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக போராடி,  அதன் பிறகு தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கம் குறைந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின்ஆதிக்கம் முழுவதுமாக முடியவில்லை என்பதை காட்டும் விதமாக இந்த குற்றச்சாட்டு இருக்கிறது. அவர் வேறு எந்த ஆதாரத்தையும் குறிப்பிடாமல் கொடூரத்தனத்தை ஒரு ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு ஹமாஸ் இது போன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டதில்லை. குடியிருப்புகளிலே புகுந்து அங்கு வசிக்கும் சாதாரண மக்களை இது போன்ற படுகொலை செய்ததில்லை என்று குறிப்பிடும் வகையிலும் அவருடைய குற்றச்சாட்டு அமைந்துள்ளது.