செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அதிமுக விலகியதை அடைத்து, நம்முடைய கூட்டணி கட்சிகளும் இனிமே நெருக்கடி கொடுப்பார்கள். கூட்டணி கட்சிகள் கூடுதலாக சீட்  கேட்பார்கள், இல்லை என்றால் அங்கே போகிறேன் என்பார்கள் என திமுகவுக்கு பயம் இருக்கும். பிஜேபி இருந்ததால் தானே போக முடியாது. இப்போது பிஜேபி இல்லை என்றால் போகலாம். நீயும் அவனும் ஒன்னு தானே ஊழலில், சுரண்டுவதில், ஆட்சி நடத்துவதில், கொள்கையில், இந்தி  எதிர்ப்பில்,  இட ஒதுக்கீட்டில்…. எதிலே பெரிய வேறுபாடு ?

வாஜ்பாயோடு இருக்கும் போது வாஜ்பாய்க்கு ஓட்டு போடுவாய்..  இவன் மோடியுடன் இருந்தால் மோடிக்கு ஓட்டு போடுவான். பெரிய திராவிடம் பேசுகிறாயே….  வாஜ்பாயோடு அவருடைய அரசிலே முரசொலி மாறனே ஒன்றை ஆண்டு படுத்தபடுக்கையாய்  வைத்துக்கொண்டு மந்திரி பதவியை எடுக்காமல் வைத்திருந்தாயே,  அவனும் வேறு வழி இல்லாமல் உன்னுடைய ஆள் வேண்டும் என்பதற்காக அவனும் ஒத்துக்கொண்டிருந்தானே.

ஆகவே நீங்கள் என்ன ரெண்டு பேரும் கற்பு கரசி என்று நான் கேட்கின்றேன். நீ வாஜ்பாயோயோடு சேர்ந்தவன், இவன்  மோடியுடன் சேர்ந்தவன். ரெண்டு பேரும் தனித்தனியாக இருந்தால்  சிறுபான்மை மக்கள் அவரவர் விருப்பபடி வாக்களிப்பார்கள். போன தடவை பிஜேபியோடு இல்லாமல் இருந்திருந்தால்  70 எம்எல்ஏக்களுக்கு மேலாக பெற்று,  நெருக்கடியை கொண்டு இருப்பார் எடப்பாடி. ரெண்டு பேரும் ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் ரெண்டு ஒன்றிலே (அதிமுக)  இவர் வெளியே வந்தது அவருடைய கட்சி நன்மைக்கு மிகச் சரியான முடிவு.

ஆகவே திமுக தான் இதில் கலங்கி போய்விட்டது. பைய பைய  இங்கிட்டு போவார்கள்,  அங்குட்டு வருவார்கள். பிறகு கொஞ்சம் பேர் அந்த பக்கமே வந்து விடுவார்கள். முதலில் சிறுபான்மை ஒட்டு, இனி அவரவர் போக்குப்படி போகும். இது திமுகவுக்கு தான் விழும் என்கின்ற நிலை இல்லை. அது எடப்பாடிக்கு நல்லது. மீண்டும் ஒரு தனி கட்சியாக நிமிர்ந்து… அதற்கு இணையாக போட்டி போடக்கூடிய வலிமையை எடப்பாடி பெற்று விட்டார் என தெரிவித்தார்.