
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதான் இவரின் கடைசி படமாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதன் பிறகு அவர் முழு நேரம் அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.
அதன்படி நடிகர் விஜய் நடிக்க வேண்டிய காட்சி பகுதிகளின் படபிடிப்பு பணிகள் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்நிலையில் இன்றுடன் பூஜா ஹெக்டே நடிக்க வேண்டிய பகுதிகள் முடிவடைந்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.